நாதாம்பாள் பிலிம் பேக்டரி தயாரிக்க, சிபிராஜ் நடிக்கும் படம் நாய்கள் ஜாக்கிரதை. அருந்ததி ஹீரோயின். உயர்ரக நாய் ஒன்று முக்கிய கேரக்டரில் நடிக்கிறது. இதில் சிபிராஜ் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: காக்க காக்க, சிங்கம், சூர்யா மாதிரியோ, காக்கிசட்டை கமல் மாதிரியோ, அப்பாவின் வால்டர் வெற்றிவேல் மாதிரியோ கெத்தான போலீசாக நடிக்கவில்லை. நாயை வைத்து துப்பு துலக்கும் சாதாரண போலீசாகத்தான் நடிக்கிறேன். போலீஸ் கேரக்டர் எனக்கு பொருத்தமாக இருக்குமா என்று எனக்கே சந்தேகம் இருந்தது. போலீஸ் டிரஸ் போட்டு அப்பாகிட்ட காட்டினேன். சில திருத்தங்களை சொல்லி ஓகே சொன்னதும்தான் நடிக்க ஆரம்பித்தேன்.
போலீசாக நடித்தாலும் சீருடையில் ஒரு சில காட்சிகளில்தான் வருவேன். போலீஸ் என்றால் சிக்ஸ் பேக் வைக்க வேண்டும் என்பது கோடம்பாக்கத்து விதிமுறை, ஆனால் என் டைரக்டர் அதெல்லாம் வேண்டாம் ஒரு ஸ்போர்ட்ஸ்மேன் லுக் இருந்தால் போதும் என்றார். இது நாய் படம், போலீஸ் படம் அல்ல என்பதை இப்போதே சொல்லிவிடுகிறேன் என்கிறார் சிபிராஜ்.

0 comments:
Post a Comment