Wednesday, 10 September 2014

கொரிய பட விழாவுக்கு செல்கிறது கோலிசோடா!




     ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கிய படம் கோலிசோடா. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பெரிய வெற்றி பெற்ற படம். இந்தப் படம் ஏற்கெனவே பல படவிழாக்களில் கலந்து கொண்டுள்ளது. தற்போது தென்கொரியாவில் நடக்கும் பூஷான் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஆசிய படங்களின் வரிசையில் வருகிற செப்படம்பர் 2ந் தேதி திரையிடப்படுகிறது. அன்றைய தினம்தான் கோலிசோடாவின் தெலுங்கு பதிப்பும் வெளியாகிறது.
இந்த விழாவில் கலந்து கொள்ள தயாரிப்பாளர் பரத், இயக்குனர் விஜய் மில்டனுடன் நடிகர் விக்ரமும் செல்கிறார்கள். இதுகுறித்து விஜய் மில்டன் கூறும்போது: இப்படி ஒரு பட விழா நடப்பதுகூட எனக்குத் தெரியாது. விக்ரம்தான் படத்தை பார்த்து வியந்து அதனை அந்த பட விழாவில் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளை செய்தார். இப்போது படம் பங்கேற்க தேர்வாகி இருப்பது எதிர்பாரத மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது என்றார். 

0 comments:

Post a Comment