Wednesday, 24 September 2014

மீண்டும் நடிக்க ஆரம்பித்தார் ஐஸ்வர்யாராய்

புகழின் உச்சியில் இருக்கும்போதே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகினார் ஐஸ்வர்யாராய். கடைசியாக அவர் நடித்தது 2010ம் ஆண்டு வெளிவந்த குஸாரஷ் படம்.
இதனை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி இருந்தார். அதன் பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்டார். இடையில் சில விளம்பர படங்களில் மட்டும் நடித்தார். குழந்தை ஆராத்யாவை கவனிக்க வேண்டியது இருந்ததால் சினிமாவை தவிர்த்தார்.
இப்போது ஆராத்யா சுயமாக இருக்க பழகிவிட்டதால் நடிக்கும் முடிவிற்கு வந்துவிட்டார். மணிரத்னம் படத்தில் அவர் மீண்டும் நடிக்க இருப்பதாக சொன்னார். ஆனால் மணிரத்னம் இன்னும் படத்தை தொடங்கவில்லை.
இந்த நிலையில் சஞ்சய் குப்தா இயக்கும் ஜாஸ்பா படத்தில் ஐஸ்வர்யாராய் நடிப்பது முறைப்படி அறிவிக்கப்பட்டுவிட்டது. நடிக்கவும் தொடங்கிவிட்டார். ஜாஸ்பா ஒரு ஆங்கில படத்தின் ரீமேக். இதில் இர்பான்கான், அனுபம் கெர், ஜான் ஆப்ரஹாம் ஆகியோரும் நடிக்கிறார்கள். அடுத்த ஆண்டு படம் ரிலீசாகிறது.

0 comments:

Post a Comment