Tuesday, 14 October 2014

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்திற்கு பிறகு மிஷ்கின் இயக்கி வரும் படம் பிசாசு. இயக்குனர் பாலா தயாரிக்கிறார். நாகா என்ற புதுமுகம் ஹீரோவாக நடிக்கிறார். லண்டன் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்து முடித்து விட்டு நடிகராகியிருக்கிறார். கொச்சியை சேர்ந்த நடன கலைஞர் மற்றும் மாடல் அழகியான பிரயஹா இதில் ஹீரோயினாக நடிக்கிறார்.
பிசாசு பேய் படம் என்றாலும் இந்த படம் அழகான பேய் படம். யாரையும் பயமுறுத்தாது. இப்படி ஒரு பேய் காதலி, பேய் நண்பன் தனக்கு வேண்டும் என்கிற அளவிற்கு அழகான பேய் படமாம். இதில் பேயாக நடிக்கிறார் பிரயஹா, வெள்ளை உடை, விரித்த தலை, கொலுசு சத்தம் இப்படி எதுவும் இல்லாமல் அழகான பேயாக நடிக்கிறார்.
பெரும்பாலான காட்சிகளில் 70 அடி உயரத்திற்கு ரோப் கட்டி தூக்கி நிறுத்தியபடியே நடிக்க வைத்திருக்கிறார்கள். அதாவது கதைப்படி வானத்தில் மிதந்தபடியே இருப்பார் பிரயஹா. இந்த காட்சிகள் படப்பிடிப்பின் போது பலமுறை தவறி விழுந்தும், சுவரில் மோதியும் காயம் பட்டிருக்கிறார். இதைப் பார்த்து அவரது அம்மா அழுதியிருக்கிறார்.
ஆனால் நடிப்பின் மீது அதீத ஆர்வம் கொண்ட பிரயஹா அம்மாவை சமாதானப்படுத்தி, காயங்களையும், வலியையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கிறார்.

70 அடி உயரத்தில் பறந்து பறந்து நடித்த பிரயஹா!

ஒருகாலத்தில் சினிமாவுக்கு இசையமைப்பது என்பது மிகப்பெரிய விஷயமாக இருந்தது. இன்றைக்கு நிலைமை தழைகீழாகிவிட்டது. ஒரு கீபோர்டும், கம்ப்யூட்டரும் இருந்தால் போதும்.. யார் வேண்டுமானாலும் இசையமைப்பாளர்கள் ஆகிவிடலாம் என்ற சூழல் உருவாகிவிட்டது.
டிஜிட்டல் சினிமா, சில லட்சங்களில் படம் எடுப்பது போன்ற காரணங்களால் புதுமுக இசையமைப்பாளர்களுக்கு சுலபமாக வாய்ப்பு கிடைத்துவிடுகிறது. அப்படி வாய்ப்பு கிடைக்கும்போது தங்கள் திறமையை நிரூபித்தவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.
அனிருத், சந்தோஷ் நாராயணன் போன்ற இசையமைப்பாளர்கள் இப்படி வந்தவர்கள்தான். வெற்றியடைவதற்கு முன் வெறித்தனமாக வேலை பார்ப்பவர்கள் வெற்றியடைந்த பிறகு மூளைக்கு வேலை கொடுக்க மறந்துவிடுகிறார்கள்.
சமீபத்தில் இளம் இசையமைப்பாளர்கள் தங்களின் சரக்கு என்று இசையமைத்த பல பாடல்கள், பல மியூஸிக் டிராக்குகள் வெளிநாட்டு ஆல்பங்களில் இருந்து திருடப்பட்டவை என்று இணையதளங்களில் ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி கையும் களவுமாக சமீபத்தில் மாட்டி இருப்பவர் அனிருத்.
ஏற்கனவே ஆண்டரியாவுக்கு லிப்லாக் கொடுத்ததை வெட்டவெளிச்சமாக்கியதும் இணையதளங்கள்தான். இதோ இப்போது கத்தி படத்தின் டீசருக்கு அனிருத் அமைத்த இசை எங்கிருந்து சுடப்பட்டது என்பதையும் அம்பலப்படுத்தி இருக்கிறது. டிவிபிபிஎஸ் – டோனி ஜூனியர் (DVBBS & Tony Junior )இருவரும் இணைந்து உருவாக்கிய இம்மார்டல் (Immortal )என்ற மியூஸிக் ஆல்பத்திலிருந்து சுட்டிருக்கிறார் அனிருத்.
சந்தேகம் இருந்தால் க்ளிக் பண்ணிப்பாருங்க… DVBBS & Tony Junior-யின் Immortal ஆல்பத்தை பாருங்கள்

கத்தி டீசருக்காக காப்பியடித்த அனிருத்!

விஜய், சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ள படம் கத்தி. இந்தப் படத்தை இலங்கை தமிழர்களான சுபாஷ்கரனும், கருணாகரனும் இணைந்து தயாரித்துள்ளனர். தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கத்தி படத்தை இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் உறவினர் பினாமி பெயரில் தயாரிக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. இதற்கு படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் ஆகியோர் தெளிவான விளக்கம் அளித்துள்ளனர். அதோடு முருகதாஸ் ஒவ்வொரு தமிழ் அமைப்பினரையும் நேரடியாக சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.
இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் விஜய்யும், முருகதாசும் முதல் ஆளாக கலந்து கொண்டனர். “நான் தியாகி இல்லை தான் ஆனால் துரோகி இல்லை” என்று விஜய் கூறிவிட்டார். “தமிழ் துரோகிகளுக்கு படம் இயக்கினால் நான் தமிழனே இல்லை” என்ற முருகதாஸ் கூறிவிட்டார்.
அதனால் எதிர்போராட்டங்கள் முடிவுக்கு வந்து கத்தி படம் வெளிவருதற்கு எந்த தடையும் இல்லாத நிலை இருந்தது. இப்போது சில தமிழ் அமைப்புகள் தீடீரென்று கத்தி படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்ற அறிவித்துள்ளது.
தமிழ் வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நேற்று (அக் 13) நடந்தது. இதில் சில தமிழ் அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பிறகு இதன் அமைப்பாளர் தி.வேல்முருகன் நிருபர்களிடம் கூறியதாவது: கத்தி படத்தை இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் உறவினர் தயாரித்துள்ளார். படத்திலிருந்து விஜய், முருகதாஸை விலக கோரினோம்.
படத்தை வெளியிடக்கூடாது என்றோம். ஆனால் தற்போது தீபாவளிக்கு வெளிவருதாக அறிவித்திருக்கிறார்கள். படத்தை திரையிடக்கூடாது என்று தியேட்டர் அதிபர்கள் சங்கத்திற்கு கோரிக்கை வைப்போம். அதையும் மீறி திரையிட்டால் தியேட்டர்கள் முன்பு போராட்டம் நடத்துவோம் என்றார்.

கத்தி படத்திற்கு மீண்டும் மிரட்டல்

Wednesday, 24 September 2014

செல்வராகவன் ‘காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி’ படங்களின் மாபெரும் வெற்றிக்கு யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் வெளிவந்த பாடல்களும் மிக முக்கியக் காரணம். அதன் பின் ‘புதுப்பேட்டை’ படத்திலும் யுவனின் இசையில் பாடல்கள் ஹிட்டாகவே அமைந்தன.
அதன் பின் செல்வராகவன் யுவன்ஷங்கர் ராஜாவை விட்டுப் பிரிந்தர். யுவன் இசையமைக்காமல் செல்வராகவன் இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம்’ ஆகிய படங்கள் தோல்விப் படங்களாகவே அமைந்தன. அதன் பின் இந்தக் கூட்டணி மீண்டும் இணையப் போகிறது என்று செய்திகள் வெளிவந்தன. ஆனால், அப்படிப்பட்ட அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
யுவன் இல்லாமல் வெற்றிக்கனியைப் பறிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட செல்வராகவன் தனது அடுத்தப் படத்தில் யுவன்ஷங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று உறுதியாக முடிவு செய்துள்ளாராம்.
அதோடு அவருடைய ஆரம்பகாலப் படங்களில் ஒளிப்பதிவாரளராகப் பணியாற்றி அரவிந்த் கிருஷ்ணாவுடனும் மீண்டும் இணைய முடிவெடுத்துவிட்டாராம். இதற்கு முன்பாகவே இவர்கள் மூவரும் இணைந்து ஒரு படக் கம்பெனியை ஆரம்பிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
இருந்தாலும் இந்த முறை அந்த பழைய வெற்றிக் கூட்டணியாக முதலில் இணைந்து ஒரு படத்தை பண்ணலாம் என்று நண்பர்கள் நினைத்திருக்கிறார்களாம். இந்தப் படத்தை தனுஷின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளது.
“உன்னாலதானே நானே வாழ்கிறேன்..உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன்…” எனப் பிரிந்து கூட்டணி மீண்டும் பாடட்டும்….!

செல்வராகவன் – யுவன்ஷங்கர் ராஜா மீண்டும் இணைகிறார்கள்…?

சிம்புவை பற்றி இணைய தளங்களில் அவ்வப்போது சர்ச்சை படங்கள் வருவது வழக்கமாக இருக்கிறது.
நயன்தாராவை முத்தமிடும் படங்கள் இன்டர்நெட்டில் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. படுக்கையறையில் நெருக்கமாக இருப்பது போன்ற படங்களும் வந்தன.
தற்போது நட்சத்திர ஒட்டலில் இளம் பெண்ணை முத்தமிடுவது போன்ற படம் வெளியாகி அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.
மலேசியாவில் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா சமீபத்தில் நடந்தது. இவ்விழாவுக்கு தமிழ், தெலுங்கு, கன்னட மலையாள நடிகர்– நடிகைகள் பலர் சென்று இருந்தார்கள். சிம்புவும் போய் இருந்தார். நட்சத்திர ஓட்டலில் அவர்கள் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அந்த ஓட்டலில் தான் இந்த சர்ச்சை படம் பதிவாகி உள்ளது.
ஓட்டலில் ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் ஒரு ஆணும் பெண்ணும் கட்டிப்பிடித்தபடி முத்தமிடுவது போல் அந்த வீடியோ படம் இருந்தது. உற்று பார்க்கும்போது அது சிம்புவை போல் இருப்பதாக கூறப்பட்டது. உடன் இருந்த பெண் திரைப்பட விருது விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய ஹர்ஷிகா என்று கூறப்பட்டது.
சிம்புவும் ஹர்சிகாவும்தான் முத்தமிட்டுக் கொண்டு இருந்துள்ளனர் என்றும் ஓட்டலில் பொருத்தப்பட்டு இருந்த கேமிராவில் இது பதிவாகியுள்ளது என்றும் கூறப்பட்டது. அதை யாரோ இன்டர்நெட்டில் பரவ விட்டுள்ளனர்.
சர்ச்சைக்குரிய அந்த வீடியோவில் இருப்பது நான் அல்ல என்றும் அந்த வீடியோ போலியானது என்றும் சிம்பு தற்போது விளக்கம் தெரிவித்து உள்ளார். போலியான வீடியோ படத்துக்காக நான் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

பெண்ணை முத்தமிடும் வீடியோவில் இருப்பது நான் அல்ல: சிம்பு விளக்கம்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் ‘அனேகன்’. இதில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை அமிரா தஸ்தூர் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டது. இதில் நடித்துக் கொடுப்பதற்காக சென்னை வந்த அவர் செய்தியாளர்களிடம் படம் குறித்து கூறும்போது,
என்னுடைய முதல் படமான ‘இஷாக்’ வெளிவரும் முன்பே எனக்கு அடுத்த படவாய்ப்பை கே.வி.ஆனந்த் சார் கொடுத்தது வியப்பாக இருந்தது. அனேகனின் கதை பிடித்திருந்தால் உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன்.
நான் பாதி மராத்தி, பாதி பார்சி பெண். அதனால் தமிழ் சுத்தமாக தெரியாது. அப்படி இருக்கும்போது தமிழில் எப்படி நடிப்பது என்று கவலைப்பட்டேன். கே.வி.ஆனந்த் சார் எனக்கு தமிழில் வசனங்கள் பேச கற்றுத் தந்தார். படத்தில் வரும் ஒரு சண்டைக்காட்சியில் டூப் போடாமல் நானே நடித்துள்ளேன்.
படப்பிடிப்பின்போது ஒருநாள் தனுஷ் பின்னால் நான் நின்று கொண்டிருந்தேன். அப்போது தனுஷ் அவரது கையை பின்புறமாக கொண்டு வர, நான் இருப்பது தெரியாமல் தவறுதலாக அவருடைய கை என் முகத்தில் ஒரு குத்து விட்டது. அதில் என் கண்கள் சிவந்துவிட்டன. எனக்கு குத்து விழுந்ததை பார்த்த அனைவரும் அதிர்ச்சியாகிவிட்டனர். பிறகு, தனுஷ் தனது செயலுக்காக என்னிடம் மன்னிப்புக் கேட்டார் என்றார்.

குத்து வாங்குன நடிகையிடம் மன்னிப்பு கேட்ட தனுஷ்

புகழின் உச்சியில் இருக்கும்போதே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகினார் ஐஸ்வர்யாராய். கடைசியாக அவர் நடித்தது 2010ம் ஆண்டு வெளிவந்த குஸாரஷ் படம்.
இதனை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி இருந்தார். அதன் பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்டார். இடையில் சில விளம்பர படங்களில் மட்டும் நடித்தார். குழந்தை ஆராத்யாவை கவனிக்க வேண்டியது இருந்ததால் சினிமாவை தவிர்த்தார்.
இப்போது ஆராத்யா சுயமாக இருக்க பழகிவிட்டதால் நடிக்கும் முடிவிற்கு வந்துவிட்டார். மணிரத்னம் படத்தில் அவர் மீண்டும் நடிக்க இருப்பதாக சொன்னார். ஆனால் மணிரத்னம் இன்னும் படத்தை தொடங்கவில்லை.
இந்த நிலையில் சஞ்சய் குப்தா இயக்கும் ஜாஸ்பா படத்தில் ஐஸ்வர்யாராய் நடிப்பது முறைப்படி அறிவிக்கப்பட்டுவிட்டது. நடிக்கவும் தொடங்கிவிட்டார். ஜாஸ்பா ஒரு ஆங்கில படத்தின் ரீமேக். இதில் இர்பான்கான், அனுபம் கெர், ஜான் ஆப்ரஹாம் ஆகியோரும் நடிக்கிறார்கள். அடுத்த ஆண்டு படம் ரிலீசாகிறது.

மீண்டும் நடிக்க ஆரம்பித்தார் ஐஸ்வர்யாராய்