சினிமாவில் இரண்டு படங்கள் ஜோடியாக நடித்தாலே கிசுகிசு சும்மா கலந்து கட்டி அடிக்கும். இன்றைக்கு சீரியலில் நான்கு ஆண்டுகள் வரை ஜோடியாக நடிக்கிறார்கள். அவர்களுக்கு இடையே கெமிஸ்ட்ரி பயாலஜி எல்லாம் ஒர்க் அவுட் ஆகாமல் இருக்குமா?
சின்னத்திரையில் ரீல் ஜோடிகளாக இருந்தவர்கள் திடீரென்று ரியல்ஜோடிகளாக மாறியிருக்கின்றனர்.
சீரியலில் கணவன் மனைவியாக நடித்தவர்கள் நிஜ வாழ்க்கையிலும் இணைவதோடு தொடர்ந்து சீரியலிலும் கணவன் மனைவியாக நடித்து வருகின்றனர்.
வாசகர்களுக்கு அறிமுகமான சில சின்னத்திரை நட்சத்திர தம்பதிகளைத் தெரிந்து கொள்ளுங்களேன்
சின்னத்திரையில் மர்மதேசம் தொடரில் அறிமுகமான சேத்தன், தேவதர்ஷினி ஜோடி இடையே ஒர்க் அவுட் ஆன கெமிஸ்டிரி அவர்களை நிஜ வாழ்க்கையிலும் ஒன்றாக இணைத்தது. இன்றைக்கும் சில சீரியல்களில் தம்பதிகளாக இணைந்து நடிக்கின்றனர்.
சின்னத்திரையில் காதல் ஜோடிகளாக வலம் வந்து மணவாழ்க்கையில் இணைந்த ஜோடி சஞ்சீவ் - பிரீத்தி. மானாட மயிலாட நிகழ்ச்சியில் பிரீத்தி பங்கேற்ற போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து திருமணத்தில் முடிந்தது.
கணேஷ்கர் – ஆர்த்தி
சிறுவயதில் இருந்தே இணைந்து நடித்த கணேஷ்கர் - ஆர்த்தி ஜோடி பல ஆண்டுகளாக நகைச்சுவை நிகழ்ச்சிகளையும், டாப் டென் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினர். இவர்களின் காதல் பற்றி கிசுகிசு பரவிய போதே இருவரும் மறுக்கவும் இல்லை ஒத்துக்கொள்ளவும் இல்லை. பெற்றோர் ஆசியுடன் மணவாழ்க்கையில் ஒன்றாக இணைந்துள்ளனர்.
ராஜ்கமல் – லதா ராவ்
ராஜ்கமல் கதாநாயகனாக நடித்த தொடரில் வில்லியாக நடித்தவர் லதாராவ். இருவருக்கும் இடையே மலந்த காதல் திருமணத்தில் முடிந்து கூட்டுக்குடும்பம், குழந்தைகள் என குதூகலமாய் பயணிக்கிறது.
ஸ்ரீ – ஷமீதா
பாண்டவர் பூமி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷமீதா. இவர் சிவசக்தி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதே சீரியலில் நடித்த ஸ்ரீயுடன் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது. இவர்களது காதல் பெற்றோருக்கு தெரிய வந்ததையடுத்து திருமணத்தில் முடிந்தது. ஸ்ரீ பிரபல இசையமைப்பாளர் ஷங்கர் கணேஷின் மகனாவார்.
பிரஜீன் – சான்ட்ரா
பிரஜீன் சன் மியூசிக் சேனலில் பணிபுரிந்த போது கிரண் டிவியில் தொகுப்பாளராக பணிபுரிந்த சான்ட்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்போது இருவரும் பெரியதிரையில் களமிறங்கியுள்ளனர்.
செந்தில் - ஸ்ரீஜா
சரவணன் - மீனாட்சி ரீல் ஜோடி ரியல் ஜோடியா மாறிட்டாங்களாமே? திருப்பதியில கல்யாணம், கேரளாவில ரிசப்சன் என்பதுதான் ஊடகங்கங்களின் லேட்டஸ்ட் பரபரப்பு. இந்த சீரியலில் நடித்த செந்தில் - ஸ்ரீஜா ஜோடியின் ரொமான்ஸ் நிஜ தம்பதிகளைப் போல இருந்ததே அவர்களின் காதலுக்கு காரணமாகிவிட்டது என்கின்றனர் சீரியலை ரசித்தவர்கள்.
இன்னும் சில ஜோடிகள்
சின்னத்திரையில் இன்னும் சில ஜோடிகள் திருமணத்திற்கு தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் ஆபிஸ் ஜோடியும் அடக்கம் என்கின்றனர் தகவல் அறிந்தவர்கள்.
0 comments:
Post a Comment