Monday, 15 September 2014

கருணாகரனை ஹீரோவாக்கியது ஏன்?: பத்ரி

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் காமெடி வாழ்க்கையை தொடங்கியவர் கருணாகரன், சூது கவ்வும், பீட்சா மாதிரி சில படங்களில் நடித்தவரின் கேரியர் டாப் கீயருக்கு சென்றது. சந்தானம் இனி நான் ஹீரோதான் என்று அறிவிக்க கருணாகரன் காட்டில் மழை. லிங்காவில் ரஜினியுடன் காமெடி செய்கிறார். அறிமுகமாகி ஒரு வருடத்திற்குள் ஆடாம ஜெயிச்சோமடா படத்தில் ஹீரோ. எப்படி ஹீரோவானர் கருணாகரன் என்பதை இப்படிச் சொல்கிறார் இயக்குனர் பத்ரி.
கிரிக்கெட் ஊழல் சம்பந்தமாக ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்டபோது தில்லு முல்லு படம் தியேட்டர்ல ஓடிக்கிட்டிருந்துச்சு. விளையாட்டில் தில்லு முல்லு, இது தில்லு முல்லு விளையாட்டு என்று விளம்பரம் பண்ணினேன். அப்போ எனக்கு கிரிக்கெட்டை வைத்து ஒரு காமெடி படம் பண்ணினா எப்படி இருக்கும்னு தோணியது. உட்கார்ந்து கதை எழுதினேன். கிரிக்கெட் பெட்டிங் கோடீஸ்வரங்கதான் பண்றாங்கன்னு நினைக்கிறோம். நடுத்தர மக்களும் பண்றாங்க. 
ஒரு கால் டாக்சி டிரைவர் மூலமாக இந்தக் கதையை கொண்டு போகணும்னு முடிவு பண்ணிய பிறகு மனசில் வந்தவர் கருணாகரன். அப்போது அவர் பெரிய காமெடி நடிகர் இல்லை. என்றாலும் என் கதை மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. நான் அவரை அழைத்து கதை சொன்னபோது அவர் ஒரு சிறிய கேரக்டரைச் சொல்லி அந்த கேரக்டரை எனக்கு கொடுங்கண்ணா என்றார். ஹீரோவே நீதான்னு சொல்லி அனுப்பி வைத்தேன். படத்துக்கு சைன் பண்றப்போ அவருக்கு கார் ஓட்டத் தெரியாது. ஓட்டத் தெரியும்னு பொய் சொல்லிட்டு ஒரே வாரத்துல நல்லா கார் ஓட்ட கத்துகிட்டு நடிக்க ஆரம்பிச்சார். இப்படித்தான் கருணாகரன் ஹீரோவானர். அவருக்கு சமமமான கேரக்டரில் சிம்ஹா நடிக்கிறார் என்றார். 

0 comments:

Post a Comment