Monday, 15 September 2014

டோலிவுட்டில் அசத்தும் 'சென்னை கேர்ள்ஸ்'

ஹிந்தியிலிருந்து தமிழுக்கு வந்து அசத்தும் நடிகைகளை விட, மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்து அசத்தும் நடிகைகள்தான் தற்போது தமிழ்த் திரையுலகில் முன்னணியில் இருக்கிறார்கள். அவர்களில் சுமார் பத்து வருடங்களாக மங்காத புகழுடன் இருந்து வருபவர் நயன்தாரா. ஆனால், தமிழ் நடிகைகள் தமிழில் அசத்துவதை விட மற்ற மொழிகளில் குறிப்பாக தெலுங்குத் திரையுலகில் அசத்தி வருகிறார்கள். இங்கிருந்து ஹிந்திக்கு சென்று வெற்றிக் கொடி நாட்டியவர் ஸ்ரீதேவி. அதே போல் இங்கிருந்து தெலுங்குத் திரையுலகிற்கு சென்று தற்போது அசத்திக் கொண்டிருக்கும் நடிகைகளில் குறிப்பிட வேண்டியவர்கள் முன்னர் த்ரிஷா, தற்போது ஸ்ருதிஹாசன்,
சமந்தா. இந்த வரிசையில் தற்போது புதிதாக ரெஜினா சேர்ந்து விட்டார் என தெலுங்கு மீடியாக்கள் தெரிவித்து வருகின்றன.
அவர்களை தெலுங்கு பத்திரிகைகள் பொதுவாக 'சென்னை கேர்ள்ஸ்' என்று அழைப்பது வழக்கம்.
த்ரிஷா, ஸ்ருதிஹாசன், சமந்தா, ரெஜினா ஆகியோர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பதால் அப்படி ஒரு பெயர். தெலுங்குத் திரையுலகில் சில வருடங்கள் முன்னர் வரை கொடி கட்டிப் பறந்தவர் த்ரிஷா. பின்னர் சிறு இடைவெளி அவருக்கு விழ, அந்த இடத்தை சமந்தா பிடித்துக் கொண்டார், ஆனாலும், த்ரிஷா தற்போது கன்னடத்தில் ஒரே படத்தில் டாப் ஸ்டார் ஆகிவிட்டார். சில தினங்களுக்கு முன் வெளியான 'பவர்' படத்தில் ரெஜினாவின் அசத்தலான தோற்றத்தை தெலுங்கு மீடியாக்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றன. முத்தக் காட்சியில் வேறு நடித்து விட்டார், கேட்கவா வேண்டும். 

'அஞ்சான்' படத்தில் நீச்சல் உடையில் பரபரப்பை ஏற்படுத்தி தமிழில் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க சமந்தா முயற்சி செய்து வர அவர் இடத்தை ரெஜினா பிடிப்பாரா என்றெல்லாம் டோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்களாம். ஆக, டோலிவுட்டைப் பொறுத்தவரை 'சென்னை கேர்ள்ஸ்'-க்கு இடையேதான் போட்டி பலமாக இருக்கிறதாம். இவர்களில் தற்போது ஸ்ருதிஹாசன், சமந்தா, ரெஜினா யார் அடுத்த கட்டத்திற்கு போக இருக்கிறார்கள் என்பது அடுத்தடுத்த வெற்றியைப் பொறுத்துத்தான் தெரிய வரும். 

0 comments:

Post a Comment