ருத்ரம்மா தேவி, பாகுபாலி படங்களில் ஆக்ரோச ஹீரோயின், தல அஜீத் படத்திலும், சூப்பர் ஸ்டாலின் லிங்கா படத்திலும் ரொமான்ஸ் நாயகி என வெரைட்டி காட்டுகிறார் அழகு நடிகை அனுஷ்கா.
ருத்ரமாதேவி படத்தில் இளவரசியாக அனுஷ்கா நடித்து வருகிறார். அதுவும் 13வது நூற்றாண்டில் வாழ்ந்த காகத்தியா வம்சத்தை சேர்ந்த இளவரசியாக நடிக்கிறார்.
சிறப்பு தோற்றத்தில் மகேஷ் பாபு நடித்துள்ளார். அனுஷ்காவுக்கு ஜோடியாக ராணா டகுபதி நடிக்கிறார். இவர்களுடன், பிரகாஷ் ராஜ், மதுமிதா மற்றும் கிருஷ்ணம் ராஜு ஆகியோரும் நடிக்கின்றனர். இளையராஜா இசையமைக்க, படத்தை குணசேகர் இயக்குகிறார்.
அசத்தல் அனுஷ்கா
அருந்ததி படத்தில் ஷோலோவாக கலக்கிய அனுஷ்கா ருத்ரம்மா தேவி படத்திலும் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது தங்க நகைகள் காணமல் போனதற்காக ருத்ரம்மா தேவி கோவிலுக்குப் போய் பரிகார பூஜைகள் செய்த அனுஷ்கா, நகைகள் கிடைக்க வேண்டும் என்று விரதம் இருந்தாராம்.
விஜய், அஜீத், சூர்யா என இளம் நாயகர்களுடன் நடித்த அனுஷ்கா முதன் முறையாக சூப்பர் ஸ்டாருடன் இணைந்துள்ளார். இதில் படத்தின் நாயகியாக மட்டுமல்லாது சூப்பர் ஸ்டாரின் தோழியாகவே மாறிவிட்டாராம் அனுஷ்கா.
லிங்கா எனக்கு ஸ்பெசல்
எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், லிங்கா என்னுடைய படப்பட்டியலி ஸ்பெஷல் என்கிறார். நான் சூப்பர் ஸ்டாரின் நாயகிகளில் ஒருவராக கொண்டாடப்படுவேன் என்கிறார்.
ஆன்மீக கதைகள் கூறும் ரஜினி
படப்பிடிப்பு இடைவேளைகளில் அனுஷ்காவிற்கு ஆன்மீக கதைகளை எளிமையாக கூறுகிறாராம் ரஜினி. அதோடு ஆன்மீகப் புத்தகங்களையும் பரிசளித்துள்ளராம்.
0 comments:
Post a Comment