Friday, 12 September 2014

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மீண்டும் பாபி சிம்ஹா

சித்தார்த் நடித்த காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் அறிமுகமானவர் பாபி சிம்ஹா. அதையடுத்து பீட்சா, நான் ராஜாவாகப் போகிறேன். சூதுகவ்வும், நேரம் ஆகிய படங்களில் நடித்த சிம்ஹாவுக்கு பீட்சா கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் நடித்த ஜிகர்தண்டா பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது. அப்படத்தின் ஹீரோ சித்தார்த்தை விட வில்லனாக நடித்த சிம்ஹாவின் நடிப்பே பெரிய அளவில் பேசப்பட்டதால், இப்போது பத்ரி இயக்கும் ஆடாம ஜெயிச்சோமடா என்ற படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடிக்கிறார்.
இந்த நிலையில், பீட்சா, ஜிகர்தண்டா படங்களை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கவிருக்கும் இறைவி என்ற புதிய படத்திலும் பாபி சிம்ஹாவுக்கு முக்கியமான வேடமாம். இந்த படத்தில் ஹீரோ, ஹீரோயின் யார் என்பதே இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், சிம்ஹா மட்டும் கதை ரெடி பண்ணுவதற்கு முன்பே ஓ.கே வாகி விட்டாராம்.
இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் சிம்ஹா. மேலும், ஜிகர்தண்டாவில் தான் நடித்துக்கொண்டிருந்தபோதே, இந்த படம் வெளியாகும்போது தமிழ்நாடே என்னைப்பற்றி பேசும் என்று தனது நண்பர்களிடம் கூறி வந்தார் பாபி சிம்ஹா. அவர் சொன்னது போலவே ஜிகர்தண்டா வெளியானபோது பாபி பெரிய அளவில் பேசப்பட்டார்.
அதேபோல் இப்போதும், கார்த்திக் சுப்புராஜின் புதிய படத்திலும் எனது கேரக்டர் பேசப்படும். ஜிகர்தண்டாவைப் போலவே இறைவி படமும் எனக்கு இன்னொரு முக்கியமான படமாக இருக்கும் என்று கூறி வருகிறார் சிம்ஹா. 

0 comments:

Post a Comment