ஜாக்கிசான் கலந்து கொண்ட 'தசாவதாரம்' இசை விழாவில் கூட ஒரு சில நடிகர்களே மேடையேற்றப்பட்டனர். ஆர்னால்ட் பல வருடங்களாகவே ஹாலிவுட்டின் புகழ் பெற்ற நடிகராக விளங்கி வருவதால் 'ஐ' படத்தின் மீதான சர்வதேச கவனம் கண்டிப்பாக அதிகமாகவே இருக்கும். தமிழ்த் திரையுலக நட்சத்திரங்களைப் பொறுத்தவரை ரஜினிகாந்த், கமல்ஹாசன் மேடையில் அமரப் போவது உறுதியாகிவிட்டதாம். மலையாளத் திரையுலகத்தில் இருந்து மம்முட்டி கண்டிப்பாக வருவார் என்கிறார்கள். அதே போல் தெலுங்குத் திரையுலகில் இருந்து மகேஷ் பாபு வருவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. கன்னடத் திரையுலகில் இருந்து யார் வருவார்கள் என்பது தெரியவில்லை. ஹிந்தித் திரையுலகத்தைச் சேர்ந்த வேறு யாரும் வருகிறார்களா என்பதும் முடிவாகத் தெரியவில்லையாம். அநேகமாக அனைத்து திரையுகிலிருந்தும் பிரபலமானவர்கள் மேடையேற்றப்படலாம் என்கிறார்கள்.
தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து விழா பற்றிய எந்தவிதமான நிகழ்ச்சி நிரலும் இன்னும் வெளியிடப்படவில்லை. ஒரு சில நாட்களில் அது பற்றிய முழு விவரம் வெளிவந்துவிடும் என்கிறார்கள்
0 comments:
Post a Comment