Friday, 12 September 2014

அஜித் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் 20 கோடிக்கு விலைபோனது!

தல 55 படத்தைப் பற்றி ஒவ்வொரு நாளும் வரும் புதிய புதிய தகவல்கள். அதனால் அப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு தினமும் எகிறிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தீபாவளிக்கும், படம் பொங்கலுக்கும் வெளிவரும் என சில நாட்களுக்கு முன்புவரை செய்திகள் அடிபட்டன. அந்தத் திட்டத்தில் தற்போது சில மாற்றங்கள் தென்படுகிறன்றன. 
என்ன மாற்றங்கள்? படத்தின் பாடல்களை நவம்பர் மாதமும், படத்தை டிசம்பரிலும் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். அது மட்டுமல்ல, இசை வெளியீட்டிற்கு சில தினங்களுக்கு முன்புதான் படத்தின் டைட்டில் என்ன என்பதை வெளியே சொல்ல இருக்கின்றனர். தல 55 படத்திற்கான தலைப்பு ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு தற்போது ரெடியாக இருப்பதாகவும், ஆனால் அதை இப்போதைக்கு வெளியிடும் திட்டம் இல்லை என்றும் கூறி வருகிறாராம் கௌதம் வாசுதேவ் மேனன். சத்யா, சத்யதேவ் போன்ற தலைப்புகள் நீண்ட நாட்களாகவே ஊடகங்களில் அடிபட்டு வருகின்றன. 
இதுகுறித்து கௌதம் வாசுதேவ் மேனனிடம் கேட்டால், சத்தியமாக இவ்விரு தலைப்புகளையும் பரிசிலிக்கவே இல்லை என்ற மறுத்திருக்கிறார். மங்காத்தா, ஆரம்பம், வீரம் என கடந்த சில படங்களாக மாஸ் அஜித்தை மட்டுமே பார்த்து வந்த ரசிகர்களுக்கு இப்படத்தில் வரும் ரொமான்டிக் அஜித் நிச்சயம் வித்தியாசமாக இருக்கும் என்றும் தல 55 படக்குழுவில் உள்ளவர்கள் சொல்கிறார்கள். இந்த படத்தைப் பற்றி லேட்டஸ்ட் தகவல்... படத்தின் சாட்டிலைட் உரிமையை 20 கோடி ரூபாய்க்கு ஒரு டிவி நிறுவனம் வாங்கியிருக்கிறதாம். 

0 comments:

Post a Comment