Sunday, 21 September 2014

மராத்தி மணமகளாக வருகிறார் சன்னி லியோன்

கவர்ச்சி  நடிகையான சன்னி லியோன், தற்போது அவர் நடித்து வரும் மிலப் ஜவேரி இயக்கும் கவர்ச்சி கலந்த காமெடி படமான மஸ்திசாதி படத்தில் இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடிக்கிறாராம்.
இப்படத்தில் துஸ்ஸார் கபூர், விர் தாஸ் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். லில்லி, லைலா என்ற இரட்டை சகோதரிகள் வேடத்தில் சன்னி லியோன் நடிக்கிறார்.இப்படத்தில் ஒரு காட்சியின் அவரது திருமணத்திற்காக பாரம்பரிய மராத்தி மணமகள் போல் புடவை, நகைகள் அணிந்து நடித்துள்ளார் சன்னி.
அதே சமயம் இதற்கு நேர்மாறான கவர்ச்சி உடையில் சகோதரி வேடத்தில் படு கவர்ச்சியாகவும் நடித்துள்ளாராம். அது மட்டுமில்லாமல் பல காமெடியான மணமகள் வேடங்களிலும் வந்து இந்த படத்தில் சன்னி லியோன் அசத்தி உள்ளாராம்.

0 comments:

Post a Comment