தி புரொபஷனல், தி பிப்த் எலிமெண்ட், லியோன் போன்ற ஆக்ஷன் படங்களை இயக்கிய பிரான்ஸ் இயக்குனர் லுக் பெசான் தற்போது இயக்கிய உள்ள படம் லூசி. ஒரு மனிதன் தன் மூளையின் சக்தியில் 10 சதவிகித்தை மட்டுமே பயன்படுத்துகிறான். முழு சக்தியையும் பயன்படுத்தினால் எப்படி இருக்கும் என்கிற கற்பனைதான் லூசி படத்தின் ஒன் லைன்.
கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் லூசிக்கு ஒரு உயிருக்கு உயிரான நண்பன் இருக்கிறான். ஒரு நாள் அந்த நண்பன் லூசியிடம் ஒரு சூட்கேசை கொடுத்து அதனை ஒரு இடத்தில் ஒப்படைத்துவிடுமாறு சொல்கிறான். அதற்குள் சக்தி வாய்ந்த போதை மருந்துகள் இருக்கிறது என்பது தெரியாமல் அதை கொண்டு செல்கிறாள் லூசி. முதலில் போலீசில் சிக்கி கொடுமைகளை அனுபவிக்கிறாள். அங்கிருந்து தப்பி செல்லும்போது போதை கடத்தல் கும்பலிடம் சிக்குகிறாள். அவர்கள் லூசிக்கு போதை மருத்தை ஊசி மூலம் செலுத்தி கொடுமை படுத்துகிறார்கள். அந்த மருந்துகள் லூசியின் உடலில் சில மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அதில் ஒன்று அவளின் முழு மூளையும் செயல்பட ஆரம்பிக்கிறது. அதைக் கொண்டு தன்னை போதை கும்பலில் சிக்க வைத்த நண்பனையும், போதை மருந்து கடத்தல் காரர்களையும் எப்படி பழிவாங்குகிறாள் என்பதுதான் கதை.
தி அயர்மேன் 2, தி அவென்ஞ்சர், கேப்டன் அமெரிக்கா, தி விண்டர் ஜோல்சர் படங்களின் நாயகி ஸ்கார்லெட் ஜோஹன்சன் லூசியாவாக நடித்திருக்கிறார். சால்ட் படம் ஏஞ்சலினா ஜூலிக்கு அமைந்ததை போல இந்தப் படம் ஸ்கார்லெட்டுக்கு அமையும் என்கிறார்கள். மார்கென் ப்ரீமேன், வில்லனாக நடித்துள்ளார். இந்த படம் தமிழில் டப் செய்யப்பட்டு அதே பெயரில் வெளியாகிறது

0 comments:
Post a Comment