Wednesday, 24 September 2014

குத்து வாங்குன நடிகையிடம் மன்னிப்பு கேட்ட தனுஷ்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் ‘அனேகன்’. இதில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை அமிரா தஸ்தூர் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டது. இதில் நடித்துக் கொடுப்பதற்காக சென்னை வந்த அவர் செய்தியாளர்களிடம் படம் குறித்து கூறும்போது,
என்னுடைய முதல் படமான ‘இஷாக்’ வெளிவரும் முன்பே எனக்கு அடுத்த படவாய்ப்பை கே.வி.ஆனந்த் சார் கொடுத்தது வியப்பாக இருந்தது. அனேகனின் கதை பிடித்திருந்தால் உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன்.
நான் பாதி மராத்தி, பாதி பார்சி பெண். அதனால் தமிழ் சுத்தமாக தெரியாது. அப்படி இருக்கும்போது தமிழில் எப்படி நடிப்பது என்று கவலைப்பட்டேன். கே.வி.ஆனந்த் சார் எனக்கு தமிழில் வசனங்கள் பேச கற்றுத் தந்தார். படத்தில் வரும் ஒரு சண்டைக்காட்சியில் டூப் போடாமல் நானே நடித்துள்ளேன்.
படப்பிடிப்பின்போது ஒருநாள் தனுஷ் பின்னால் நான் நின்று கொண்டிருந்தேன். அப்போது தனுஷ் அவரது கையை பின்புறமாக கொண்டு வர, நான் இருப்பது தெரியாமல் தவறுதலாக அவருடைய கை என் முகத்தில் ஒரு குத்து விட்டது. அதில் என் கண்கள் சிவந்துவிட்டன. எனக்கு குத்து விழுந்ததை பார்த்த அனைவரும் அதிர்ச்சியாகிவிட்டனர். பிறகு, தனுஷ் தனது செயலுக்காக என்னிடம் மன்னிப்புக் கேட்டார் என்றார்.

0 comments:

Post a Comment